

ரஜினி உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் வாழவும், அவரது கோச் சடையான் திரைப்படம் வெற்றி பெறவும் வேண்டி ரஜினி ரசிகர் கள் புதன்கிழமை, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரை சென்றனர்.
வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் ரவி தலை மையில் புதன்கிழமை சோளிங்கரில் இருந்து 300 ரசிகர் கள், பஸ் மற்றும் கார்களில் திருப்பதிக்கு வந்தனர். பின்னர் திருப்பதி பஸ் நிலையத்தில் இருந்து மலை அடிவாரமான அலிபிரி வரை பாத யாத்திரையாக சென்றனர். அப்போது வழி நெடு கிலும் புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு களை விளக்கும் கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் வரும் தேர்தலில் பொது மக்கள் கண்டிப்பாக ஓட்டு போடவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.