

மூவி பஃப் - பர்ஸ்ட் கிளாப் நடந்திய சீசன் 2 குறும்பட போட்டியில் கலந்துகொண்ட 750 படங்களில் டாப் 5 குறும்படங்களின் தேர்வு நேற்று வெளியிடப்பட்டுள்ளன. அதில் ‘குக்கருக்கு விசில் போடு’, ‘கல்கி’, ‘கம்பளிப்பூச்சி’, ‘மயிர்’, ‘பேரார்வம்’ ஆகிய 5 படங்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. 3 நிமிடங்கள் கொண்ட இப்படங்கள் ஜூன் 29 ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 200 திரையிரங்குகளில் இடைவேளையின்போது திரையிடப்பட உள்ளன. அவற்றில் டாப் 3 படங்களுக்கான தேர்வு ஆகஸ்டு மாதம் நடக்க உள்ளது. முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் குறும்படங்களுக்கு தலா 3, 2,1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். இது தவிர தேர்வு பெறுபவர்களிடம் சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் கதை கேட்டு சிறந்த கதையாக இருக்கும் பட்சத்தில் அதை திரைப்படமாக உருவாக்கவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.