‘தி கோட்’ வெளியீடு: முதல் ஆளாக வாழ்த்திய அஜித்!

‘தி கோட்’ வெளியீடு: முதல் ஆளாக வாழ்த்திய அஜித்!
Updated on
1 min read

நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினருக்கு அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மோகன், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தி கோட்’. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார் அஜித். இது குறித்து தனது எக்ஸ் தள பதவில் வெங்கட்பிரபு “நன்றி தல. விஜய் அண்ணாவுக்கு, எனக்கு மற்றும் ‘தி கோட்’ படக் குழுவினருக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த ஏ.கேவிற்கு நன்றி. நாங்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்பாக ‘தி கோட்’ படத்தின் பாடலை பார்த்துவிட்டு அஜித் பாராட்டியது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேட்டிகளில் வெங்கட்பிரபு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in