பாடகி சுசித்ராவுக்கு ரீமா கல்லிங்கல் நோட்டீஸ்

பாடகி சுசித்ராவுக்கு ரீமா கல்லிங்கல் நோட்டீஸ்
Updated on
1 min read

மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகுபல நடிகைகள், திரையுலகினர் மீது பாலியல் குற்றம்சாட்டிவருகின்றனர். இதன் அடிப்படையில் சிலர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘நடிகை ரீமா கல்லிங்கல் போதை பார்ட்டி நடத்தியவர். அதில் பல இளம் பெண்கள்,ஆண்கள் கலந்து கொண்டு போதைக்கு அடிமையானார்கள். கொச்சியில் ரீமாவின் வீட்டில் இதுதொடர்பாக ரெய்டுநடந்தது. அவரை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை?’ என்று பாடகி சுசித்ரா கேள்வி எழுப்பி இருந்தார்.

இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாடகி சுசித்ரா மீது சட்ட நடவடிக்கை எடுக்கஉள்ளதாக, ரீமா கல்லிங்கல் தெரிவித்துள்ளார். அவர்வெளியிட்ட பதிவில், ‘‘பாடகி சுசித்ரா, எந்த ஆதாரமும்இல்லாமல் என் மீது குற்றம்சாட்டி உள்ளார். அவர் மீதுசிறப்பு விசாரணை குழுவில் புகார் அளித்திருக்கிறேன். மேலும், அவர் மீது அவதூறு வழக்கு தொடர நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in