

தனது பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி அன்று, லிங்கா திரைப்படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்து வரும் லிங்கா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கவிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய ரஜினிகாந்த அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
தனியார் கன்னட செய்தித் தொலைக்காட்சிக்கு அவர் பதிலளிகையில், "லிங்காவின் படப்படிப்பு தற்போது கர்நாடகத்தில் நடந்து வருகிறது. அதற்காக நான் இங்கு வந்துள்ளேன். இறைவனின் கருணையால் எனது ஆரோக்கியம் நன்றாக உள்ளது. எனது பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று, லிங்காவை வெளியிடும் திட்டம் இருக்கிறது" என்று கூறினார்.