

இயக்குநர் விஜய் இயக்கத்க்தில், நடிகர் விக்ரம் பிரபுவின் அடுத்த திரைப்படத்தில் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவுள்ளார். 80-களில் தமிழ் படங்களில் வலம் வந்த நடிகை மேனகா மற்றும் மலையாள திரைப்பட இயக்குநர் சுரேஷின் மகள் கீர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை நட்சத்திரமான அறிமுகமான கீர்த்தி, பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த கீதாஞ்சலி படத்தில் கதாநயாகியாக நடித்தார். இப்படம் தோல்வியடைந்தாலும், கீர்த்தி தனது நடிப்புத் திறமையால் அனைவராலும் கவனிக்கப்பட்டார்.
அண்மையில் திலீப் மற்றும் கீர்த்தி இணைந்து நடித்த 'ரிங் மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது.