

சித்தார்த், சிம்ஹா, லஷ்மி மேனன் நடித்து வெளியான ‘ஜிகர்தண்டா’ விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து ஹிந்தியிலும் ரீமேக்காக உள்ளது. பாலிவுட்டின் தயாரிப்பாளர்கள் சிலர் இப்படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டி வருவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் கூறியுள்ளார்.
”எனக்கு சில பாலிவுட் தயாரிப்பாளர்களிடமிருந்து போன் வந்தது அவர்கள் இப்படத்தை ரீமேக் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர், ஆனால் எதுவும் முடிவாகவில்லை. என்னால் இப்பொழுது எதையும் அதிகாரப்பூர்வமாக சொல்ல முடியாது” என்று கதிரேசன் தெரிவித்தார்.
ரவுடிகளைப் பற்றிய திரைப்பட இயக்கும் ஆசையில், ஒரு நிஜ ரவுடியை, இயக்குநர் ஒருவர் பின் தொடர்வதுதான் ’ஜிகர்தண்டா’வின் கதை. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியான ஜிகர்தண்டா தற்போது ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.