விஜய் காட்டிய பணிவும் அன்பும் நெகிழவைத்தது: நடிகை மதுபாலா

விஜய் காட்டிய பணிவும் அன்பும் நெகிழவைத்தது: நடிகை மதுபாலா
Updated on
1 min read

நடிகர் விஜய் காட்டும் பணிவும் அன்பும் தன்னை மிகவும் நெகிழ்ச்சிடையச் செய்ததாக நடிகை மதுபாலா குறிப்பிட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை மதுபாலா. ஜெண்டில்மேன் உள்ளிட்ட படங்களில் நடத்த அவர், தனது திருமணத்திற்கு பிறகு 'வாயை மூடி பேசவும்' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்குத் திரும்பினார்,

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் "நான் விஜய் ரசிகை" என்று கூறியதற்கு, மதுபாலாவிற்கு நடிகர் விஜய் போன் செய்து நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை மதுபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "விஜய் காட்டிய பண்புவும் அன்பும் என்னை மிகவும் நெகிழ்ச்சிடைய வைத்துள்ளது. ஒரு பேட்டியில் நான் விஜய் ரசிகை என்று கூறியதற்காக எனக்கு போன் செய்து நன்றி கூறினார்.

எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவரது இந்தப் பண்பை உணர்ந்ததற்குப் பிறகு அவரை கூடுதலாக பிடித்திருக்கிறது. திரைப்படங்களில் மட்டுமே பிடித்த அவரை, தற்போது நிஜ வாழ்க்கையிலும் மிகவும் பிடித்திருக்கிறது.

2009 முதல் ட்விட்டர் தளத்தில் எனக்கு தோன்றியவற்றை எழுதி வருகிறேன். ஆனால், தற்போது ட்விட்டர் தளத்தில் என்னை பின் தொடருவர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். விஜய்யை பற்றி ட்வீட்டியதால் ட்ரெண்ட்டாகி வருகிறேன். விஜய்க்கு அவரது பெரிய பலமே ரசிகர்கள் தான். அவர்கள் காட்டும் அன்பும் வரவேற்பும் மகத்தானது.

அதேவேளையில், என் மீதான விமர்சனங்களையும் நையாண்டிகளையும் மவுனத்தால் எதிர்கொள்வது எனது பலம்" என்று மதுபாலா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in