ஆக.30-ல் ‘கனா காணும் காலங்கள் சீசன் 3’ ரிலீஸ்: பாடல் வெளியீடு

ஆக.30-ல் ‘கனா காணும் காலங்கள் சீசன் 3’ ரிலீஸ்: பாடல் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் 3ஆவது சீசன் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடரில் இடம்பெறுள்ள ‘நியூ ஏஜ் நியூ பேட்ச்' பாடல் வெளியாகியுள்ளது.

கென் ராய்சன் இயக்கிய இந்தப் பாடலை, ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ரக்ஷிதா சுரேஷ்
பாடியுள்ளனர். அரவிந்த் அன்னெஸ்ட், ஷிபி சீனிவாசன், விக்ரம் பிட்டி, ஆர்த்தி அஷ்வின், கவிதா மற்றும் ஸ்ரீ ராதா ஆகியோர் அடங்கிய குழுவினர் குரல் கொடுத்துள்ளனர். ஃபுளூட் நவின் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

'கனா காணும் காலங்கள்' முதலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பள்ளி வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் கதைக்களம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த 2022-ம் ஆண்டு சீரிஸாக வெளியானது.

இந்த சீரிஸின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து டிஸ்னி ஹாட்ஸ்டார் கடந்த ஆண்டு ஏப்ரல் 21 அன்று இரண்டாவது சீசனை வெளியிட்டது. இரண்டாம் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம், பள்ளி மாணவர்களை மையமாக வைத்து உருவாகும் இந்த சீரிஸின், மூன்றாவது சீசனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 30-ம் தேதி தொடரை ஹாட்ஸ்டாரில் காணலாம். மேலும் இது தொடர்பான பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in