Published : 02 Aug 2024 09:05 PM
Last Updated : 02 Aug 2024 09:05 PM
சென்னை: விஜய்யின் ‘தி கோட்’ படத்தின் 3-வது சிங்கிள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பாடல் குறித்த ப்ரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் முதல் சிங்கிளான ‘விசில் போடு’ வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இரண்டாவது சிங்கிளான ‘சின்ன சின்ன கண்கள்’ விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. மறைந்த பாடகர் பவதாரிணியின் குரல் ஏஐ மூலம் மறுஆக்கம் செய்யப்பட்டு இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. இப்படத்தின் 3-வது சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், பாடலுக்கு ‘ஸ்பார்க்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும், இப்பாடலை யுவன் சங்கர் ராஜா, விருஷா பாலு இணைந்து பாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதியுள்ளார். வீடியோவில் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதன் மூலம் காதல் பாடலாக இருக்கும் என தெரிகிறது.
விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படம் செப்டம்பர் 5-ம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
Unleashing the #Spark from tomorrow 6 PM
Here’s the #Spark promo
Boom!! Let your speakers blast
Vocal by @thisisysr | @Singer_vrusha@actorvijay Sir
A @thisisysr Magical
A @gangaiamaren | Saraswathi Puthra @ramjowrites lyrical
A @vp_offl Hero… pic.twitter.com/B6hHyFt6rb— venkat prabhu (@vp_offl) August 2, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT