மருத்துவமனையில் சாருஹாசன் அனுமதி

மருத்துவமனையில் சாருஹாசன் அனுமதி

Published on

நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும் நடிகருமான சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள சாருஹாசனுக்கு 93 வயது ஆகிறது. கடைசியாக விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் மோகன் நடித்த ‘ஹரா’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனைக்குச் சென்று பார்த்த அவரது மகள் சுஹாசினி, தந்தையைஅணைத்தபடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில், “மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மகள்களின் அன்பு மற்றும் அக்கறையுடன் அவர் நன்றாகக் குணமடைந்து வருகிறார்” என பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in