

நாகராஜன் இயக்கத்தில் பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலக்கூத்து’. முழுக்க மதுரையில் இக்கதையை படமாக்கியுள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் நாகராஜன் கூறும்போது, ‘‘மதுரை பின்னணியில் எத்தனையோ படங்கள் வந்துள்ளன. ஆனாலும், இப்படம் கொஞ்சம் மாறுபட்டு இருக்கும். மதுரையில் யாருமே படமாக்காத இடத்தில் பெரும்பாலான காட்சிகளை எடுத்துள்ளோம். மதுரை கதை என்றதும், சாதி பிரச்சினை என நினைத்துவிட வேண்டாம். கவுரவம், மரியாதை போன்றவை படத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.
நாயகன் - நாயகி வாழ்க்கையில் காலம் எப்படிப்பட்ட கூத்துகளை நடத்துகிறது என்பதை சுவாரசியமாக கூறியிருக்கிறோம். யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல், இப்படத்தை இயக்கியுள்ளேன்’’ என்றார்.