கலையரசன் vs ஷேன் நிகாம் - ரத்தம் தெறிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ டீசர் எப்படி? 

கலையரசன் vs ஷேன் நிகாம் - ரத்தம் தெறிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ டீசர் எப்படி? 
Updated on
1 min read

சென்னை: மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் நடிகராக அறிமுகமாகும் ‘மெட்ராஸ்காரன்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டீசர் எப்படி? - தமிழ் சினிமாவின் ‘வன்முறை’ சீசனுடன் இணைந்துள்ள இப்படத்தின் டீசரில் தலை வெட்டப்பட்ட ஒருவரின் உடல் காட்டபடுகிறது. கத்தி, அருவா, ரத்தம் சகலமும் வந்து செல்கிறது. ஷேன் நிகாம் vs கலையரசன் என இருவருக்கும் இடையிலான ஈகோ பிரச்சினை தான் படம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் இருவரின் வாழ்க்கையும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை காட்சிகள் தொட்டுச் செல்கின்றன. சாம் சி.எஸ்ஸின் விறுவிறுப்பான பின்னணி இசையுடன் விறுவிறுப்பாக காட்சிகள் நகர்கின்றன. வழக்கமான ஈகோ க்ளாஷ் கதை தான் என்றாலும் அதில் எந்த அளவுக்கு புதுமையும், சுவாரஸ்யமும் இடம்பெற்றுள்ளது என்பது தெரியவில்லை. இருப்பினும் டீசர் நம்பிக்கையை அளித்துள்ளது.

மெட்ராஸ்காரன்: கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்மத்’ படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம். அவரின் ‘இஷ்க்’, ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஆர்டிஎக்ஸ்’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், தற்போது அவர் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தை வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை ஜெகதீஸ் தயாரிக்கிறார்.சாம்.சி.எஸ். படத்துக்கு இசையமைத்துள்ளார். டீசர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in