அயர்லாந்தில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு!

தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன்
தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன்
Updated on
1 min read

‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணையும் படம், 'தக் லைஃப்’. இதில் சிலம்பரசன், த்ரிஷா, இந்தி நடிகர் அலி ஃபஸல், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், அபிராமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு, கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சென்னை, ராஜஸ்தான், டெல்லி உட்பட பல்வேறு பகுதிகளில் நடந்தது. 60 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழு கூறுகிறது. இதுவரை நடந்த படப்பிடிப்புக்கான டப்பிங்கை கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா ஆகியோர் முடித்து விட்டனர். அடுத்தகட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. அயர்லாந்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in