பிரசாந்தின் ‘அந்தகன்’ ஆகஸ்ட் 15-ல் ரிலீஸ்!

பிரசாந்தின் ‘அந்தகன்’ ஆகஸ்ட் 15-ல் ரிலீஸ்!
Updated on
1 min read

சென்னை: பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு உள்ளிட்டோர் நடித்த படம் ‘அந்தாதூன்’. 2018-ல் வெளியான இப்படம் அந்த ஆண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக மாறியது. ‘அந்தாதூன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன். படத்தை அவரது ஸ்டார் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார்.

அவருடன் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட காலமாக வெளியீட்டுக்கு காத்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை ஒருவழியாக படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதே நாளில் பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in