‘இந்தியன் 2’ படத்தின் 12 நிமிட காட்சிகள் குறைப்பு

‘இந்தியன் 2’ படத்தின் 12 நிமிட காட்சிகள் குறைப்பு
Updated on
1 min read

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம், ‘இந்தியன் 2’. சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை லைகா, ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. கடந்த 12-ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தின் நீளம் அதிகம் என்றும் பார்வையாளர்கள் கூறி வந்தனர்.

இதனால் 20 நிமிடக் காட்சிகள் குறைக்கப்படும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் 12 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் 2 மணி நேரம் 48 நிமிடங்களாக படம் ஓடும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in