3-வது குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்

3-வது குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்
Updated on
1 min read

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது மூன்றாவது குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டியுள்ளார். இது தொடர்பான நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பெயர் சூட்டு விழா புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன், தனது மனைவி ஆர்த்தியை குறிப்பிட்டு, “ஆப்ரேஷன் தியேட்டரில் உன்னுடன் இருந்தேன். நம் குழந்தையை பெற்றெடுக்க நீ கடந்து வந்த வலிகளை கண்டேன். இந்த அழகான உலகத்தை எனக்காக உருவாக்கிக் கொடுக்க, நீ தாங்கிய வலிகளுக்காக என்னென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனும், ஆர்த்தியும் திருமணம் செய்துகொண்டார்கள். தம்பதிகளுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் உண்டு. கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி அவர்களுக்கு 3ஆவதாக ஆண்குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ‘அயலான்’ வெளியானது. அடுத்து ‘அமரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூடன் இணைந்துள்ள சிவகார்த்திகேயன் ‘எஸ்கே23’ என்ற தலைப்பிடப்படாத படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in