‘நம் நாடு’ ஆன வி.சாந்தாராமின் ‘அப்னா தேஷ்’

‘நம் நாடு’ ஆன வி.சாந்தாராமின் ‘அப்னா தேஷ்’
Updated on
1 min read

இந்திய சினிமாவின் மாமேதை என்கிறார்கள், இயக்குநர் வி.சாந்தா ராமை!நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர். இந்தி, மராத்தியில் படங்கள் தயாரித்த இவரதுபிரபாத் பட நிறுவனம் தமிழில் ‘சீதா கல்யாணம்’ என்ற படத்தையும் தயாரித்திருக்கிறது.

சினிமா தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இந்தியாவில் பெண்கதாபாத்திரங்களில் ஆண்களே நடித்து வந்த நிலையில், அந்தக் கதாபாத்திரங்களில் பெண்களையே நடிக்க வைத்தவர் இவர்.இந்தியாவின் முதல்கலர் படமான 'ஜனக்ஜனக் பாயல் பாஜே'-வை இயக்கிஇருக்கும் சாந்தாராமின் இந்திப் படங்களில் ஒன்று ‘அப்னாதேஷ்’. இது தமிழில் ‘நம் நாடு’ என்ற பெயரில் வெளியானது.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில், கருப்புச்சந்தையை மையப்படுத்தி உருவானபடம். கடத்தப்படும் ஒருபெண்ணின் பழிவாங்கும் கதையும்தான். சுதந்திரம் அடைந்த பின்இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இந்தப் படம் பேசியது.

அப்போது பிரபல பாடகியாக இருந்த புஷ்பா ஹன்ஸ் நாயகியாக நடித்தார். உமேஷ் சர்மா,சந்திரசேகர், கேசவ் ராவ் ததேஉட்பட பலர்நடித்த இந்தப் படத்தின் இந்திப் பதிப்புக்கு புருஷோத்தம் இசை அமைத்தார். தமிழ் பதிப்புக்கு ஜி.கோவிந்தராஜுலு இசை அமைக்க, பாடல்களை ராஜகோபால ஐயர் எழுதினார். எம்.எல்.வசந்தகுமாரி பின்னணி பாடியிருந்தார். 1949-ம் ஆண்டு இதே நாளில் தமிழில் ரிலீஸான இந்த தேசப் பக்தி படம் தெலுங்கிலும் வெளியானது. தமிழில் சுமாரான வெற்றியை பெற்றது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாநடிப்பில் 1969-ம் ஆண்டு ‘நம்நாடு’ என்ற பெயரில் ஒரு படம் வெளியானது. இது தெலுங்கில் வெற்றிபெற்ற ‘கதாநாயகுடு’ படத்தின் ரீமேக்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in