

தாமிரா இயக்கத்தில் சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் நடித்துள்ள ‘ஆண் தேவதை’ திரைப்படம் ஜூன் மாதம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் புதிய படத்தின் கதைகள் கேட்பதில் கவனம் செலுத்தி வரும் நடிகை ரம்யா பாண்டியன் ஓய்வு நேரங்களில் வீட்டு மாடியில் ஆர்கானிக் தோட்டம் வளர்ப்பதிலும் அக்கறை காட்டிவருகிறார். ‘‘பாலக் கீரை, அரைக்கீரை, புளிச்சக்கீரை உள்ளிட்ட கீரை வகைகள், கத்தரி, வெண்டை, வெள்ளரி என பல்வேறு காய்கறிகளை வளர்த்து வருகிறேன். எல்லாம் ஆர்கானிக் வகைகள். நேற்றுகூட என் வீட்டுத் தோட்டத்து காய்கறி சாப்பாடுதான். அதோடு இப்போ கோடையும் வந்தாச்சு. குற்றாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு ஒவ்வொரு வருஷமும் குடும்பத்தோடு சுற்றுலா செல்வோம்.
அப்பா, அம்மா அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் சுற்றுலாவோடு, உறவினர்களையும் பார்த்து திரும்புவதில் அவ்வளவு சந்தோஷம்’’ என்று குதூகலிக்கிறார் ரம்யா பாண்டியன்.
இதை மிஸ் பண்ணிடாதீங்க...