

பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் படம், ‘சிங்காநல்லூர் சிக்னல்’. முத்தமிழ் படைப்பகம் சார்பில் ஏ.ஜே.பிரபாகரன் தயாரிக்கும் இந்தப் படத்தை ஜே.எம்.ராஜா இயக்குகிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
பவ்யா திரிகா நாயகியாக நடிக்கும் இதில், ஷைன் டாம் சாக்கோ, ஹரீஸ் பெரேடி, ஹரிஷங்கர், நிகில் தாமஸ், அஜய் கோஷ், ஸ்ரீரஞ்சனி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.
பின்னர், நடிகர் பிரபுதேவா பேசும்போது, “ இந்தக் கதையில் டிராபிக் போலீஸாக நடிக்கிறேன். கதையை தாண்டி அந்த கேரக்டருக்கு என புதிதாக பல விஷயங்களை இயக்குநர் வைத்திருக்கிறார். அந்த கேரக்டரின் பயணம்தான் இந்தப் படம். கண்டிப்பாக ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும். இந்தப்படத்தில் பல வருடங்களுக்கு முன் நான் பழகிய பலருடன் மீண்டும் இணைந்துள்ளேன். படத்தின் டைட்டிலை ‘சிங்காநல்லூர் சிக்னல்’ என்று ஆங்கிலத்தில் வைத்திருக்கிறார்கள். பான் இந்தியா படம் என்பதால் இப்படி வைத்திருக்கிறார்கள். நான் எப்போது படம் இயக்குவேன் என்று கேட்கிறார்கள். விரைவில் இயக்க இருக்கிறேன் ” என்றார்.