பிரபல யூடியூபர் காலித் அல் அமெரியுடன் நடிகை சுனைனா நிச்சயதார்த்தம்?

பிரபல யூடியூபர் காலித் அல் அமெரியுடன் நடிகை சுனைனா நிச்சயதார்த்தம்?
Updated on
1 min read

சென்னை: பிரபல யூடியூபர் காலித் அல் அமெரி என்பவருடன் நடிகை சுனைனாவுக்கு திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அண்மையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து பின் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

சுனைனா நடிப்பில் கடந்த ஆண்டு கடைசியாக ‘ரெஜினா’ திரைப்படம் வெளியானது. ஆனால், இப்படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அடுத்து அவர் நடிக்கும் படங்கள் குறித்து அறிவிப்பு எதுவும் இல்லை. அண்மையில் நடிகை சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்தை குறிக்கும் வகையில் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இது தொடர்பான மற்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

இந்நிலையில், அவர் பிரபல யூடியூபர் காலித் அல் அமெரி என்பவரை நிச்சயம் செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் மம்மூட்டியுடன் காலித் ஒரு வீடியோ நேர்காணலை எடுத்திருந்தார். அதில் மம்மூட்டி, “உலகம் அழியும் வரை மக்கள் உங்களை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. யாருக்கும் அப்படி நடக்கப்போவதில்லை” என பேசிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்தப் பேட்டியின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் யூடியூபர் காலித். இவர், தன்னுடைய முதல் மனைவியான சலமா முஹம்மது என்பவரை 6 மாதங்களுக்கு முன் விவாகரத்து செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர், தனக்கு நிச்சயதார்த்தம் ஆனதாக இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம், சுனைனா - காலித் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in