

திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம் மற்றும் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி ஆகியோர் கால்ஷீட் விவகாரங்களால் சில வாரங்களாக படப்பிடிப்பு நடக்காமல் இருந்து வந்த இயக்குநர் மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’ படப்பிடிப்பு, மீண்டும் இந்த வாரம் மிக துரிதமாக வேலைகள் தொடங்கியுள்ளன. அனைத்து நடிகர்களின் கால்ஷீட் முழுக்க அமைந்ததால் இந்த இரு வாரங்களில் அரவிந்த் சுவாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண் விஜய் உள்ளிட்டவர்களின் காட்சிகளை முழுக்க முடிக்கும் வேலையில் இயக்குநர் இறங்கியுள்ளார். விறுவிறுவென வளர்ந்து வரும் இந்த செட்யூலோடு படத்தின் முக்கிய காட்சிகள் நிறைவு பெறும் என்றும் படக்குழு தரப்பில் கூறுகின்றனர்.