

சென்னை: ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் -சீசன் 10 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வந்தது. பாடகர்மனோ, பாடகிகள் சுஜாதா, அனுராதா ஸ்ரீராம், இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் நடுவர்களாக செயல்பட்டனர். நிகழ்ச்சியை ம. கா. பா. ஆனந்த், பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கினர். இதன் ‘கிராண்ட் ஃபினாலே’ வரும்ஞாயிற்றுக்கிழமை (23-ம் தேதி) நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. டி.வி.யிலும் லைவாக ஒளிபரப்பாகிறது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பைனலுக்கு ஜான் ஜெரோம், விக்னேஷ்,ஜீவிதா, வைஷ்ணவி, ஸ்ரீநிதி ராமகிருஷ்ணன்என 5 போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர். முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.60 லட்சம்மதிப்புள்ள வீடும், 2-ம் இடம் பிடிப்பவருக்கு ரூ.10 லட்சம்பரிசு தொகையும் வழங்கப்பட இருக்கிறது.