கவனம் ஈர்க்கும் ஹாரர் காட்சிகள் - சோனியா அகர்வாலின் ‘7ஜி’ ட்ரெய்லர் எப்படி?

கவனம் ஈர்க்கும் ஹாரர் காட்சிகள் - சோனியா அகர்வாலின் ‘7ஜி’ ட்ரெய்லர் எப்படி?
Updated on
1 min read

சென்னை: சோனியா அகர்வால் நடித்துள்ள ‘7ஜி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஹாரூன் இயக்கத்தில் சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட், சித்தார்த் விபின் நடித்துள்ள படம் ‘7ஜி’. இப்படத்துக்கு சிதார்த் விபின் இசையமைத்துள்ளார். இயக்குநர் ஹாரூன் தனது ட்ரீம் ஹவுஸ் பேனர் மூலம் படத்தை தயாரித்துள்ளார். கண்ணா படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சோனியா அகர்வாலின் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் டைட்டிலைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அவர் ‘7ஜி’ என்ற தலைப்பிடப்பட்ட படத்தில் நடித்துள்ளார். ஹாரர் - த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் வரும் ஜூலை 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ட்ரெய்லர் வீடியோ:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in