

அறிமுக இயக்குநர் மணிமூர்த்தி இயக்கியுள்ள படம், 'லாரா'. அசோக்குமார், அனுஸ்ரீ, வெண்மதி, வர்ஷினி, மேத்யூ வர்கீஸ், கார்த்திகேசன், எஸ்.கே.பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.
எம்.கே. ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் சார்பில் எம்.கார்த்திகேசன் தயாரித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகி இருக்கிறது.
இயக்குநர் மணிமூர்த்தி கூறும்போது, “இந்தக் கதை கடலும் கடல் சார்ந்த பகுதியிலும் நடப்பதால் கடலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினோம். ஒரு குற்ற வழக்கு, எப்போது காவல் துறையைக் குழப்புகிறது? என்னென்ன புள்ளிகளில் புலனாய்வில் இருந்து நழுவிச் செல்கிறது? என்பது போன்ற விவரங்களை அறிந்து இதன் திரைக்கதையை அமைத்துள்ளோம். படத்தில் வரும் சிறு பாத்திரம் கூட சம்பந்தம் இல்லாமல் இருக்காது. படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது” என்றார்.