டைரக்டர் ஆன ஆட்டோ டிரைவர்

இயக்குநர் சாஜி சலீம், நடிகை ஸ்வேதா டோரத்தி மற்றும் விதார்த்
இயக்குநர் சாஜி சலீம், நடிகை ஸ்வேதா டோரத்தி மற்றும் விதார்த்
Updated on
1 min read

விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், 'லாந்தர்'. ஞானசவுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு எம்.எஸ். பிரவீன் இசையமைத்துள்ளார்.

கிரைம் த்ரில்லர் வகையிலான இந்தப் படத்தை எம் சினிமா புரொடக்ஷன் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீ விஷ்ணு இணைந்து தயாரித்துள்ளனர். சாஜி சலீம் இயக்கியுள்ளார். இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ.ஆர். கே. சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாடல்களை தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பூச்சி முருகன் வெளியிட, படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். இதன் இயக்குநர் சாஜி சலீம் திருப்பூரில் ஆட்டோ டிரைவராக இருந்தவர்.

அவர் கூறும்போது, “18 வயதில் இருந்தே ஆட்டோ ஓட்டத் தொடங்கிவிட்டேன். சினிமா இயக்கும் ஆசை மனதுக்குள் இருந்தது. சென்னை வந்தேன். முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களில் பணியாற்றினேன். ‘லாந்தர்’ கோவை பின்னணியில் ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் கதை. விதார்த் போலீஸ் அதிகாரி. நகரத்தில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அதே நேரம் அவர் வீட்டிலும் ஒரு பிரச்சினை. இரண்டையும் அவர் எப்படி கையாண்டு முடிக்கிறார் என்பதுதான் படம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in