எனக்கு கிடைத்த கவுரவம்: ’இந்தியன் 2’ இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்

எனக்கு கிடைத்த கவுரவம்: ’இந்தியன் 2’ இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
Updated on
1 min read

நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் வெளியிட்ட சுயாதீன இசை ஆல்பம் ‘இனிமேல்' வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து ஆத்வி சேஷ் நடிக்கும் ‘டெகாயிட்' என்ற தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ‘இந்தியன் 2' பாடல் வெளியீட்டு விழாவில், அவர் தந்தை கமல்ஹாசனை கொண்டாடும் விதமாக அவரது ஹிட் பாடல்களைத் தொகுத்து இசை நடன நிகழ்வை அரங்கேற்றியிருந்தார்.

இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது, ‘என் தந்தையின் திரை வாழ்வை கவுரவப்படுத்துவது எனக்கு கிடைத்த பெருமை. அவரது படங்களில் இடம்பெற்ற பாடல்களில் சிலவற்றை இணைத்து, மெலடியாக தயாரித்து வழங்க உதவியாக இருந்த எனது குழுவினருக்கு நன்றி. சென்னை ரசிகர்கள் முன் இந்நிகழ்வை அரங்கேற்றியது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் மேடையில் பாடி நடனம் ஆடும் போது என் தந்தையின் சிரிப்பை கண்டு மகிழ்ந்தேன். அவரது அன்பும், ஆதரவும் தான் என்னை இசையமைப்பாளராக வளர்த்தது. மேலும் பல இசை நிகழ்வுகளை எனது குழுவுடன் இணைந்து அரங்கேற்றுவேன்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in