அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘பிரேமலு’ நஸ்லென்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘பிரேமலு’ நஸ்லென்!
Updated on
1 min read

சென்னை: அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘பிரேமலு’ நஸ்லென் கஃபூர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது

அஜித்தின் 63-வது படமாக உருவாகும் ‘குட் பேட் அக்லி’ படத்தை ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் இதனை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தின் தலைப்புக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் நல்லவன், கெட்டவன் மற்றும் அக்லி என மூன்றையும் பிரதிபலிக்கும் வகையில் அந்த லுக் கவனம் ஈர்த்தது.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ‘பிரேமலு’ படத்தில் ஹீரோவாக நடித்த நஸ்லென் கஃபூர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.

கிரிஷ் ஏடி இயக்கத்தில் வெளியான ‘பிரேமலு’ படம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் தெலுங்கு மாநிலங்களிலும் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் காட்சிகள், வசனங்கள் ஓடிடி வெளியீட்டுக்குப் பின்பும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in