

கமல்ஹாசன் தயாரிப்பில், ‘தூங்காவனம்’ இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்க உள்ள புதிய படத்தில் விக்ரம் ஜோடியாக கமல் மகள் அக்சராஹாசன் நடிக்கிறார். இந்த படம் முழுக்க கிரைம், திரில்லர் களமாக உருவாக இருக்கிறது. இப்படத்துக்கான முழு திரைக்கதை ஆக்கமும் முடிந்துள்ளது. தற்போது மலேசியாவில் படப்பிடிப்பு இடங்களுக்கான தேர்வு நடந்து வருகிறது. விக்ரம், அக்சராஹாசன் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நித்தினிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கால்ஷீட் தேதி பிரச்சினை யால் அவர் நடிக்கவில்லை. திரைத்துறையினர் நடத்திவரும் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததும் இப்படத்தின் முதல்கட்ட வேலைகள் தொடங்க உள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக ஒரு வெப் சீரீஸ் படத்திலும் அக்சரா நடிக்க உள்ளார்.