ரஜினிகாந்துக்கு நண்பன், சல்மான் கானுக்கு வில்லன்: பிசியான சத்யராஜ்

ரஜினிகாந்துக்கு நண்பன், சல்மான் கானுக்கு வில்லன்: பிசியான சத்யராஜ்
Updated on
1 min read

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ‘வேட்டையன்’ படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட ஆக்‌ஷன் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜுனில் தொடங்க இருக்கிறது. இதில் சத்யராஜ், ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அவர் ரஜினிக்கு நண்பராக நடிக்க இருக்கிறார். 38 வருடத்துக்குப் பிறகு இருவரும் இந்தப் படத்தில் இணைகின்றனர். முன்னதாக இருவரும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் நடித்திருந்தனர்.

இப்போது சேர்ந்து நடிப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தில் சத்யராஜ் வில்லனாக நடிக்க இருக்கிறார். இதையும் சத்யராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். இது தவிர, சில வெப் தொடர்களிலும் அவர் நடித்து வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in