

'கத்தி' இசையில் ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியங்கள் காத்திருப்பதாக, அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
விஜய், சமந்தா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கத்தி' படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட இருக்கிறார்கள்.
இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று இருக்கிறது. இதில் விஜய், சமந்தா, சதீஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள்.
'கத்தி' இசை வெளியீடு, செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இருக்கும் என இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
மேலும், "'கத்தி' பாடல்கள் பணி ஏறக்குறைய முடிந்துவிட்டது. ரசிகர்களுக்கு பெரிய ஆச்சர்யங்கள் காத்திருக்கிறது. விஜய் சார் பாடவிருக்கும் பாடல் தயாராகிவிட்டது. அவரை வைத்து வரும் நாட்களில் பதிவு செய்ய இருக்கிறேன்.
'கத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பார் மாத இரண்டாம் வாரத்தில் இருக்கும். தேதியினை விரைவில் அறிவிக்க இருக்கிறோம். மொத்த படக்குழுவும் 'கத்தி' இசையினை உங்களிடம் சமர்பிக்க காத்திருக்கிறோம்." என்று கூறியுள்ளார் அனிருத்.