சீரியஸான கதைக்களத்தில் ‘ஜாலி’ - ஹிப்ஹாப் ஆதியின் ‘PT சார்’ ட்ரெய்லர் எப்படி?

சீரியஸான கதைக்களத்தில் ‘ஜாலி’ - ஹிப்ஹாப் ஆதியின் ‘PT சார்’ ட்ரெய்லர் எப்படி?
Updated on
1 min read

சென்னை: ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடித்துள்ள ‘PT சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் வேணுகோபாலன், அடுத்து ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘PT சார்' என்று தலைப்பு வைத்துள்ளனர். கஷ்மிரா பர்தேசி நாயகியாக நடித்துள்ளார்.

அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த், பாண்டியராஜன், இளவரசு,தியாகராஜன் உட்பட பலர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - “என்னோட பிடி பீரியட யாருக்காகவும் விட்டுகொடுக்க முடியாது” என்ற வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லரில் தொடக்கம் ஜாலியாகவும், கலகப்பாகவும் நகர்கிறது. பள்ளியில் நடக்கும் குறும்புகள், காதல், நடனம், அலப்பறைகள் என கடக்கிறது.

தொடர்ந்து, பள்ளியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி, அவருக்கு துணை நிற்கும் நாயகன் ஆதி வேலையிலிருந்து நீக்கப்படுவது, ஒதுங்கிப்போவது, திருப்பி அடிப்பது என கிட்டத்தட்ட ட்ரெய்லரே படத்தின் கதையைச் சொல்கிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியின் நீதிக்கான போராட்டத்தை நாயகத் தன்மையுடன் கூடிய வெகுஜன சினிமாவாக உருவாக்கியிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in