‘வடக்கன்’ தலைப்புக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு

‘வடக்கன்’ தலைப்புக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு
Updated on
1 min read

சென்னை: எழுத்தாளரும் கதை, வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தி, இயக்குநராக அறிமுகமாகும் படம், 'வடக்கன்'.

இதில் குங்குமராஜ், வைரமாலா ஜோடியாக நடித்துள்ளனர். ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா என பலர் நடித்துள்ள இந்தப் படத்தை டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரித்துள்ளார். எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் டீஸர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வரும் 24-ம் தேதி படத்தை வெளியிடுகிறது.

இந்நிலையில் இந்தப் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள், ‘வடக்கன்’ என்ற தலைப்பை மாற்ற வேண்டும் என்றனர்.இதனால், படக்குழு ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in