“விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது” - பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து! 

“விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது” - பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து! 
Updated on
1 min read

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மத்திய அரசின் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என்னுடைய அருமை நண்பர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது கொடுத்து கவுரவித்ததில் நமக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி. அதுமட்டுமில்லாமல் பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் அவருடைய வரலாற்றை பதிவிட்டிருக்கிறார்கள். அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது.

விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. திடீரென்று தோன்றி பல சாதனைகள் செய்து அப்படியே மறைந்துவிட்டார். இனிமேல் விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது. அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த்” இவ்வாறு ரஜினிகாந்த அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷண் விருதை, அவரது மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா கடந்த 9-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார். சென்னை திரும்பிய பிரேமலதா விஜயகாந்த் நினைவிடத்தில் பூஜை செய்து பத்ம பூஷண் விருது மற்றும் பதக்கத்தை கண்ணீருடன் வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in