‘எந்த பிரச்சாரத்தையும் செய்யாத படம் எலக்சன்’ - விஜய்குமார்

‘எந்த பிரச்சாரத்தையும் செய்யாத படம் எலக்சன்’ - விஜய்குமார்
Updated on
1 min read

‘சேத்துமான்’ இயக்குநர் தமிழ், இயக்கியுள்ள படம், ‘எலக்சன்’. இதில் ‘உறியடி’ விஜய்குமார், பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதியுள்ளார். மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரித்துள்ள இந்தப் படம் மே 17-ல் வெளியாகிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய்குமார் கூறும்போது, “உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் திரைப்படம் இது.

களம் தேர்தலாக இருந்தாலும், அரசியலை அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாகக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தி, குடும்ப கதையாகத்தான் தயாராகி இருக்கிறது. இதில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் படம் எந்த பிரச்சாரத்தையும் செய்யவில்லை.

இந்தப் படத்தின் முதுகெலும்பு, இந்தக் கதையின் முதுகெலும்பு பற்றி சொல்ல வேண்டும் என்றால், நடிகர் ஜார்ஜ் மரியம் ஏற்று நடித்திருக்கும் நல்லசிவம் என்ற அரசியல் கட்சி தொண்டரைத் தான் சொல்ல வேண்டும். கட்சி தொண்டன் என்றால் தன்னலம் பார்க்காமல் மக்களுக்காகவும், கட்சிக்காகவும் கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு கேரக்டர்.

பெரும்பாலானவர்கள் இதுபோன்ற கதாபாத்திரத்தை நம் குடும்பத்திலேயே பார்த்திருப்போம். அப்படி ஒரு கதாபாத்திரம் பற்றிய கதை இது. இதில் இயக்குநர் தமிழுடன் இணைந்து பணியாற்றியது மனநிறைவை அளித்தது” என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in