குழந்தைகள் படமாக உருவான ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’

குழந்தைகள் படமாக உருவான ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’
Updated on
1 min read

சென்னை: குழந்தைகள் இடம்பெறும் வகையில் பல திரைப்படங்கள் உருவாகின்றன. ஆனால் அவை குழந்தைகளுக்கான படங்களாக இருப்பதில்லை. இந்நிலையில் குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகி இருக்கிறது, ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’. இதில், கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவசங்கரன், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ராம் கந்தசாமி எழுதி இயக்கி, தனது கவிலயா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். அருண்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குநர் ராம் கந்தசாமி கூறும்போது, “குழந்தைகளின் உலகத்துக்குள் நுழைந்துவிட்டால் இந்த உலகமே நமக்கு அழகானதாக மாறிவிடும். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நமது உணர்வில் மாற்றம் ஏற்படும். ஓர் உயிரைத் தேடிப் பயணம் செய்யும் இரு உயிர்களின் கதையாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்று படம் இது.படம் பார்த்தவர்கள், இது அனைவருக்குமான படம் என்றார்கள். விரைவில் வெளியாக உள்ளது. 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in