‘அருவி’யை மிஞ்சும் கதைக்காக காத்திருக்கும் அதிதி

‘அருவி’யை மிஞ்சும் கதைக்காக காத்திருக்கும் அதிதி
Updated on
1 min read

‘அருவி’ திரைப்படம் வெளியாகி 6 மாதங்கள் ஆகியும் இன்னும் எந்த புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருக்கிறார், நடிகை அதிதிபாலன். என்னக் காரணம் என்று அவரிடம் கேட்டபோது, ‘‘கொஞ்சம்கூட யோசிக்க தேவையில்லையே. ‘அருவி’மாதிரி பெரிய படத்தை கொடுத்துவிட்டு அதைவிட சுமாரான கதாபாத்திரம் அமைந்தால் எப்படி எடுத்துக்கொள்வது. நிறைய கதைகள் கேட்டு வருகிறேன்.

இப்போ வரைக்கும் ‘அருவி’ கதாபாத்திரத்தை மிஞ்சும் கதைகள் வரவில்லை. அதை விட சிறப்பான ஒரு கதாபாத்திரம் அடுத்து தொட வேண்டும் என்ற பொறுப்பு இருக்கிறது. அதுக்காகத்தான் காத்திருக்கிறேன். தமிழில் கதைகள் வருவதைப்போல சில மலையாள இயக்குநர்களும் கதை சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். நல்ல கதை அமைந்ததும் விரைவில் அறிவிப்பு இருக்கும்’’ என்கிறார், அதிதி பாலன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in