காமெடி படமாக உருவான ‘காக்கா’

காமெடி படமாக உருவான ‘காக்கா’
Updated on
1 min read

சென்னை: நடிகர் தேனி பரமன், இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘காக்கா’. ஆரன் பிக்சர்ஸ் சார்பில் ரேணுகா கிருஷ்ணசாமி தயாரித்துள்ள இதில் இனிகோ பிரபாகர், சென்ராயன், ரோஸ்மின், தான்யா, அப்புக்குட்டி, முனீஷ்காந்த், கொட்டாச்சி உட்படபலர் நடித்துள்ளனர். எஸ்.கே.சுரேஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கெவின் டிகோஸ்டா இசை அமைத்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் தேனி பரமன் கூறியதாவது: இது முழு நீள காமெடி படம். குடும்பத்தோடு ரசிக்கும் விதமாக இருக்கும். ஒரு வீட்டில் இருக்கும் அக்கா, தங்கை இருவரையும் மூன்றுபேர் காதலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் சிக்கல்கள்தான் கதை.

அந்த மூன்று பேரில் ஒருவனாக நானும் நடித்துள்ளேன். இனிகோ பிரபாகர், சென்ராயன் ஆகியோர் மற்றவர்கள். நான் மதுரையை சேர்ந்த முரட்டுத்தனம் கொண்டவனாகவும் இனிகோ, திருச்சியை சேர்ந்த அமைதியானவராகவும் சென்ராயன் சென்னையை சேர்ந்தவராகவும் நடித்துள்ளோம். நான் சினிமா, சின்னத்திரை தொடர்களில் நடித்திருந்தாலும் இயக்குநர் நலன் குமரசாமியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். அந்த அனுபவத்தில் இதை இயக்கி இருக்கிறேன். பொதுவாக காமெடி படம் எடுப்பது கஷ்டம் என்பார்கள். எனக்கு அப்படி தெரியவில்லை. இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இவ்வாறு தேனி பரமன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in