Published : 07 May 2024 11:57 AM
Last Updated : 07 May 2024 11:57 AM

விமலின் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ என்ன கதை?

சென்னை: விமல் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. நாயகியாக மெரி ரிக்கெட்ஸ் நடித்துள்ளார். கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரித்துள்ளார். டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். அறிமுக இயக்குநர், மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ளார்.

படம் பற்றி அவர் கூறியதாவது: சென்னையில் இருந்து, இறந்த ஒருவரின் உடலை எடுத்துக்கொண்டு திருநெல்வேலி செல்கிறார் ஆம்புலன்ஸ் டிரைவர் விமல். இறந்து போனவர் அங்குள்ள பெரிய மனிதர். லிஃப்ட் கேட்டு அந்தவண்டியில் ஏறுகிறார் கருணாஸ். இரண்டு பேருமே முரண்பட்ட கதாபாத்திரங்கள். மன அழுத்தத்தில் இருக்கும்ஹீரோவுக்கும் எப்போதும் தொணதொணவென்று பேசிக்கொண்டிருக்கிற கருணாஸுக்கும் பிரச்சினை. இருவருக்கும் வழியில் வேறு பிரச்சினையும் வருகிறது. அதைத் தாண்டி அவர்கள் அந்த உடலை எப்படி கொண்டு சேர்க்கிறார்கள் என்பதுதான், படம். மனிதம் பற்றி வலியுறுத்தும் படமாக இருக்கும். டார்க் காமெடி, எமோஷனல் விஷயங்களும் இருக்கும். விமல் இதில் அதிகம் பேசமாட்டார். அவருடைய எக்ஸ்பிரஷன்கள் சிறப்பாக இருக்கும். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இவ்வாறு மைக்கேல் கே.ராஜா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x