குப்பை கிடங்கு துர்நாற்றத்தோடு 10 மணி நேரம் நடித்த தனுஷ்

குப்பை கிடங்கு துர்நாற்றத்தோடு 10 மணி நேரம் நடித்த தனுஷ்
Updated on
1 min read

சென்னை: நடிகர் தனுஷ், சேகர் கம்முலா இயக்கும் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடிக்கின்றனர். இது, பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இதில் தனுஷின் முதல் தோற்றம் சில வாரங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதில் அவர் யாசகனை போல காட்சியளித்தார். சில நாட்களுக்கு முன் நாகர்ஜுனாவின் தோற்றம் வெளியானது. அதில் மழையில் குடை பிடித்தபடி நடந்து வர, பின்னால் கட்டு கட்டாகப் பணம் இருப்பது போல காணப்பட்டது.

சமீபத்தில் மும்பையில் உள்ள குப்பைக் கிடங்கு ஒன்றில், இதன் படப்பிடிப்பு நடந்தது. தனுஷ் நடித்த காட்சிகள் அங்கு 10 மணி நேரம் படமானது. உண்மையான உணர்ச்சி வர வேண்டும் என்பதற்காக, முகக்கவசம் கூட அணியாமல் அந்த துர்நாற்றத்தைத் தாங்கிக் கொண்டு அவர் நடித்ததாகப் படக்குழு தெரிவித்துள்ளது. நடிப்புக்கான அவர் அர்ப்பணிப்பை படக்குழு பாராட்டியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in