நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும்!

நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும்!
Updated on
1 min read

சென்னை: நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படத்துக்கு ‘Bloody Beggar’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை புரொமோ வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அத்துடன் படத்தின் முதல் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ், அட்லீ, வரிசையில் அடுத்ததாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர், “சுவாரஸ்யமான கதைகளை தயாரிப்பதே நோக்கம்” என தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். ‘Bloody Beggar’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ் லீ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜென் மார்டின் இசையமைக்கிறார்.

புரொமோ வீடியோ: இது தொடர்பான ஜாலியான புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நெல்சன், ரெடின், கவின், சிவபாலன் அமர்ந்திருக்க, ஜாலியாக பேசிக்கொண்டிருக்கும் ரெடின், “நம்ம பையனுக்கு நம்ம பண்ணாம யாரு பண்ணுவா” என படத்தை தயாரிக்கும்படி நெல்சனிடம் கோருகிறார். தொடர்ந்து படத்தில் கவின் கதாபாத்திர தோற்றத்தை தயார் செய்து காட்டும்படி சொல்ல நீண்ட நேரமாக ஒப்பனை செய்யப்படுகிறது.

இறுதியில் யாசகம் பெறுபவர் தோற்றத்தில் கவின் வந்து நிற்க, படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியிடப்படுகிறது. இறுதியில், “அந்த விக், ட்ரெஸ், எல்லாத்தையும் எடுத்து வைங்க” என ரெடின் சொல்ல, ‘எதுக்கு?” என நெல்சன் கேட்கிறார். “ஒருவேள படம் முடிஞ்சு உனக்கு தேவப்படலாம்” என ஜாலியாக முடிகிறது வீடியோ.

முதல் தோற்றம்: கவினை பொறுத்தவரை ‘லிஃப்ட்’, ‘டாடா’, என அவருக்கான தோற்றங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. சாக்லேட் பாய் தோற்றத்துக்கு பொருந்தங்கூடியவர். ‘ஸ்டார்’ படத்தில் சில தோற்ற மாறுபாடுகளை நிகழ்த்தியுள்ளார். தற்போது இந்தப் படத்தில் யாசகம் கேட்பவர் கதாபாத்திரத்தில் புதிய தோற்றத்தில் கவனம் பெறுகிறார். நடிப்பின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை நாடி வருவது தெரிகிறது. புரொமோ வீடியோவைக் காண:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in