கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ படப்பிடிப்பு நிறைவு

கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ படப்பிடிப்பு நிறைவு
Updated on
1 min read

சென்னை: கீர்த்தி சுரேஷ் நடித்து அடுத்து வெளியாக இருக்கும் படம், ‘ரிவால்வர் ரீட்டா’. இதில் சுனில், அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, பிளேடு சங்கர் உட்பட பலர்நடித்துள்ளனர்.

சந்துரு இயக்கும் இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகைசமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். அந்த போஸ்டர் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி இருப்பதாகவும் விரைவில் இதன் டிரெய்லர் வெளியாக இருக்கிறது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in