Published : 01 May 2024 06:09 AM
Last Updated : 01 May 2024 06:09 AM

‘தக் லைஃப்’ படத்தில் இந்தி நடிகர் அலி ஃபஸல்

சென்னை: நடிகர் கமல்ஹாசன், ‘நாயகன்' படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம், ‘தக் லைஃப்'. த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. இதில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகினர். இதையடுத்து ஒரு கேரக்டரில் சிம்பு நடிக்கிறார். மற்றொரு கேரக்டரில் அருண் விஜய் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது இந்தி நடிகர் அலி ஃபஸல் இணைந்துள்ளார். இவர், ஃபியூரியஸ் 7, விக்டோரியா அப்துல், டெத் ஆன் த நைல், காந்தஹார் ஆகிய ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. அங்கு சிம்பு, கமல்ஹாசன், அலி ஃபஸல் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நடக்கிறது. இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதியும் இதில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘தக் லைஃப்’ படத்தில் அலி ஃபஸல் இணைந்தது பற்றி படக்குழுவிடம் கேட்டபோது, அதுபற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்போம் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x