

மும்பை: பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே என்ற அன்னப்பூர்ணா. இவர் கணவர் சந்திரமணி ஜன்கட். இவர்கள் மும்பையில் வசித்து வந்தனர். தனது சகோதரியின் திருமணத்துக்காக, பிஹார் மாநிலம் பாகல்பூர் ஜோக்ஸருக்கு வந்தார். குடும்பத்தினருடன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார் அம்ரிதா. இந்நிலையில், மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த போலீஸார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
தற்கொலை செய்து கொள்ளும் முன், தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், ‘அவள் வாழ்க்கை 2 படகுகளில் இருக்கிறது. என்படகை மூழ்கடித்து அவள் வாழ்வை எளிதாக்கினோம்?’என்று குறிப்பிட்டுள்ளார். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.