கட்டப் பஞ்சாயத்து நடக்கிறது - நடிகர் விஷால் காட்டம்

கட்டப் பஞ்சாயத்து நடக்கிறது - நடிகர் விஷால் காட்டம்
Updated on
1 min read

ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ள ‘ரத்னம்’ படம், நேற்று வெளியானது. திருச்சி, தஞ்சை பகுதிகளில், விநியோக தொகை பாக்கியை செலுத்தினால்தான் படத்தை வெளியிடுவோம் என்று அப்பகுதி தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக நடிகர் விஷால் நேற்று முன்தினம் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில், “ஒருவழியாக கட்டப் பஞ்சாயத்து, பயமோ, வருத்தமோ இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமா மற்றும் அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பாக இந்த ஆண்டு ரோலர்கோஸ்டர் பயணத்தில் இருப்பதே அதன் அர்த்தம்.

அன்பான திருச்சி, தஞ்சாவூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களே, கங்காரு நீதிமன்றங்கள் இன்னும் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தியதன் மூலம், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். கொஞ்சம் தாமதம் ஆனாலும், உங்களை சட்டத்தின் உதவியுடன் கீழிறக்குவேன். பல்வேறு தயாரிப்பாளர் சங்கங்களுக்கு நன்றி. தயாரிப்பாளர்களுக்கு எதற்காக இத்தனை சங்கங்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

இது உங்கள் அனைவருக்கும் அவமானம். ஒரு முன்னாள் தயாரிப்பாளரின் மகனாக, வியாழக்கிழமை மாலை, தன் குழந்தையை பார்வையாளர்களுக்கு சமர்ப்பிக்க காத்திருப்பது எப்படி இருக்கும் என்பதை பார்த்ததன் மூலம் இதை குறிப்பிடுகிறேன்” என்று விஷால் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in