அஜித் பிறந்தநாளில் மீண்டும் வெளியாகிறது ’பில்லா’!

அஜித் பிறந்தநாளில் மீண்டும் வெளியாகிறது ’பில்லா’!
Updated on
1 min read

சென்னை: அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘பில்லா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

தற்போது தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் டிரெண்ட் அமோகமாக போய்க் கொண்டிருக்கிறது. ‘வாரணம் ஆயிரம்’ தொடங்கி ‘வேட்டையாடு விளையாடு’, ‘3’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ வரிசையில் கடந்த வாரம் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில் அஜித் பிறந்தநாளான மே 1ஆம் தேதி வெங்கட் பிரபு இயக்கிய ‘மங்காத்தா’ திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து 2008ஆம் ஆண்டு வெளியான ‘பில்லா’ திரைப்படமும் அதே நாளில் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

ஜிபி என்டர்டெயின்மென்ட்டின் அரவிந்த் சுரேஷ் குமார் & டாக்டர் ஞானபாரதி ஆகியோர் மே 1, 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் மூலம் 150+ திரைகளில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.

அஜித்குமாரின் இரட்டை வேடத்தின் நடித்த இப்படத்தில் , நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் 1980ல் ரஜினி நடித்த ‘பில்லா’ படத்தின் ரீமேக் ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in