ராஞ்சா: காதல் பின்னணியில் உருவாகும் த்ரில்லர்

ராஞ்சா: காதல் பின்னணியில் உருவாகும் த்ரில்லர்
Updated on
1 min read

சென்னை: காதல் பின்னணியில் உருவாகும் த்ரில்லர் படத்துக்கு ‘ராஞ்சா' என்று தலைப்பு வைத்துள்ளனர். சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் சாம்பசிவம் தயாரிக்கின்றனர். சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகும் இதில் பிரஜன், இவானா வருண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். அதிரன் சதீஷ், பத்மன், அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படம் பற்றி பேசிய இயக்குநர் சந்தோஷ் ராவணன், "ஓர் இளம் பெண்ணை மையமாகக் கொண்ட படம் இது. அவளைச் சுற்றி தொடர்மரணங்கள் நடைபெறுகின்றன. ஏன் அப்படி நடக்கிறது? அதன் பின்னணியில் இருப்பது என்னஎன்று கதை செல்லும்.

அதோடு காதலை புதுமையான கோணத்தில், அதன் இயல்பு மாறாமல் திரையில் காட்ட முயற்சித்துள்ளோம்" என்றார். இந்தப் படத்துக்கு ஹரி இசையமைக்கிறார். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in