

சென்னை: சசிகுமார், பிரீத்தி அஸ்ராணி, இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, புகழ் உட்பட பலர் நடித்த படம், ‘அயோத்தி’.
டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கி இருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து மந்திரமூர்த்தி இயக்கும் புதிய படத்தை கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஜி.என்.அன்புச்செழியன் வழங்க சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரிக்கிறார். அடுத்த படத்தை நெல்லைப்பின்னணியில் இயக்க இருப்பதாக மந்திரமூர்த்தி ஏற்கெனவே கூறியிருந்தார். நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.