

இயக்குநர்கள் மிஷ்கின், ராம் நடிப்பில் வெளியான ‘சவரக்கத்தி’ படத்தில் நடித்த ஸ்வாதிஷ்டா, ‘மதம்’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அவர் பேசும்போது, ‘‘அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்தான் எனக்கு ரோல்மாடல். அழகு, திறமையை அவர்கள் சரிவிகிதத்தில் கொண்டிருக்கிறார்கள். அவர்களது நடிப்பும், ஆளுமையும் வியக்க வைக்கின்றன.
அதேபோல நான் பிரமித்து பார்க்கும் இன் னொரு நடிகை ஷாலினி அஜித். மணிரத்னம் சார் கட்டாயம் ‘அலைபாயுதே 2’ படத்தை எடுப்பார். அதில் நான் நாயகியாக நடிக்க வேண்டும் என்பது தான் என் ஒரே ஆசை’’ என்கிறார் ஸ்வாதிஷ்டா.