மக்களவைத் தேர்தல்: காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்குமார்!

நடிகர் அஜித்
நடிகர் அஜித்
Updated on
1 min read

சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழகத்தில் மட்டும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

காலை முதலே பொதுமக்கள் மற்றும் அரசியல், திரை பிரபலங்கள் பலரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து செல்கின்றனர்.

அந்த வகையில் தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து தனது வாக்கை செலுத்தினார். வெள்ளை நிற சட்டையும், கருப்பு நிற கூலிங் கிளாசும் அணிந்தபடி வந்த அஜித்தை காண அங்கு ஏராளாமானோர் கூடினர்.

அதே போல நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்திக், சசிகுமார், கவுதம் கார்த்திக், பிரபு எனப் பலரும் தங்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in